மண்பானை மீன்குழம்புக்கு தனி ருசி

393
Spread the love

முந்தைய தலைமுறை வரை அன்றாடப் பயன்பாட்டில், மண்பாண்டங்கள் முக்கிய இடம் வகித்தன. ஆனால், இன்றைக்கு பொங்கலன்றுகூட அலுமினியம், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்களில் கடமைக்காகப் பொங்கல் வைப்பதே பெரும்பாலும் நடக்கிறது. ஆனால் அண்மைக் காலமாக, மக்களிடையே பாரம்பர்ய உணவு வகைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மண்பானையில் சாதம், மீன்குழம்பு, ஆப்பம், பணியாரம் எல்லாம் செய்கிறார்கள். ஹோட்டல்களிலும் மண்பாண்டங்களில் சமைத்துப் பரிமாறுவதையே வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
மண்பானைச் சமையலில் அப்படி என்னதான் இருக்கிறது? மண்பானையில சமைச்சாத்தான் உணவோட உண்மையான ருசி தெரியும். மண்பாத்திரத்துல சமைக்கிற உணவு சீக்கிரமா கெட்டுப் போகாது. குறிப்பா மண்பானையில வைக்கிற மீன் குழம்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு வாரம்கூட கெட்டுப் போகாம இருக்கும்.
மண் பானைத் தண்ணியைக் குடிச்சா நோய் எதுவும் வராது.
மண்பானைச் சமையல் என்பது மரபு மட்டுமல்ல, உணவின் தன்மை மாறாமல், சுவையை அதிகரிக்கக்கூடியது. மண்பானைப் பாத்திரத்தில் சமைக்கப்படும் உணவு எளிதில் செரிமானாகும்.
மண்பானையில் சமைக்கும்போது அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.
மண்பானையில் உள்ள நுண் துளைகளால் உணவுக்குள் வெப்பம் சீராகவும், சமநிலையிலும் ஊடுருவும். இதனால் ஆவியில் வேகவைத்த உணவைப் போன்ற தன்மையைப் பெறும்.
மண்பானைச் சமையலுக்கு அதிக எண்ணெய் தேவைப்படாது. இனி சமையலறையில் மண்பானை தவறாமல் இடம் பெற வேண்டும்.

LEAVE A REPLY