Spread the love

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் கிராமத்தில் நடைபெறவுள்ள கோயில் திருவிழாவில் இந்து -முஸ்லீம் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் வி.களத்தூர் கிராமத்தில் நேற்று இரவு முதல் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வி.களத்தூர் கிராமத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வந்த 3 நாள் செல்லியம்மன்/மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒரே நாளில் நடத்த மாவட்ட காவல் துறை அனுமதித்திருந்தது. இதை ஏற்காத அக்கிராம மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு மூன்று நாள் திருவிழா நடத்த அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்துக்களை ஆதரித்து களம் இறங்கியுள்ள இந்து முன்னணியினரை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி பள்ளிவாசல் உள்ள வீதி வழியாக சாமி ஊர்வலம் வர எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் வருவாய் துறை மற்றும் காவல்துறையினர் அக்கிராமத்தில் முகாமிட்டு முழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பெரம்பலூர் எஸ்பி திஷாமித்தல் தலைமையில், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY