Spread the love

மதுரை – சென்னை – டெல்லி இடையே ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இன்று மதுரையில் இருந்து பகல் 11.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏற்றப்பட்டனர். ஆனால் சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் விமானம் புறப்படவில்லை. இதனால் விமானத்தில் அமர்ந்திருந்த சில பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதது. இதையடுத்து பயணிகள் விமான பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு தற்போது மதுரை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்படும் முன் விமானத்திற்குள் காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்க தவறியதால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. விமானத்தில் 166 பேர் பயணம் செய்தனர். இதில் 30 பேருக்கு காது மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்ததால் விமானம் உடனடியாக மும்பைக்கு திருப்பப்பட்டு, தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY