ரமணா பாணியில் கண்டக்டரை 3 நாட்களாக வைத்திருந்த ஆஸ்பத்திரி

309

இறந்தவரை மூன்று நாட்களாக வைத்து சிகிச்சை அளித்ததாக கூறி பணம் முயன்றதாக தந்சை கே ஜி ஆஸ்பத்திரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரமணா சினிமா பாணியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேர்ந்த சேகர் என்பவர் அரசு பஸ் கண்டக்டர் இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நாகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் குடும்பத்தினர் சேகரை தஞ்சையில் உள்ள கேஜி என்ற தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அனுமதித்தனர் கடந்த சில நாட்களில் 5 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் கட்டியுள்ளார். மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தனியார் ஆஸ்பத்திரி வற்புறுத்தியதால் உறவின்ர்கள் கட்ட வழி இல்லாததால் சேகரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் கேஜி ஆஸ்பத்திரி அனுமதி வழங்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சண்டை போட்டு சேகரை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது தான் சேகர் இறந்து 3 நாட்கள் ஆன விபரம் தெரிய வந்தது. இதையடுத்து உறவினர்கள் தஞ்சையிலுள்ள தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

LEAVE A REPLY