ராஜா எச்ஐவி கிருமியாம்

262
Spread the loveதவறான உறவு முறையால் உருவான எச்ஐவி கிருமி போல இயற்கைக்கு முரணான பேச்சுக்களால் பிரபலமாகி வரும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன், பொதுச் செயலாளர் அன்பரசு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்துத்துவா கொள்கைகளில் ஊறிப்போன பாஜக பொறுப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்ற கருத்து நாட்டில் வலுப்பெற்று வருகிறது. இதை மீண்டும், மீண்டும் தனது பேச்சால் நிரூபித்து வருகிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. வேலைக்கு செல்லும் பெண்கள், பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்கள் விபசாரிகள் என்று பேசிவரும் அவரது சித்தாந்தம்தான் பாஜகவின் கொள்கை என்றால் பாஜக தலைவர்கள் இதை கண்டிக்காதது, அக்கட்சியின் சுஷ்மா சுவராஜ்,நிர்மலா சீத்தாராமன், தமிழிசை போன்றவர்கள் அந்த சித்தாந்தத்தின் வழி வந்தவர்கள் என்று ஒப்புக் கொண்டதாக கருத வேண்டும். அவரை கைது செய்ய தமிழக அரசு தயங்க கூடாது. தவறான உறவு முறையால் உருவான எச்ஐவி கிருமி போல இயற்கைக்கு முரணான பேச்சுக்களால் பிரபலமாகி வருகிறார். அவரது பேச்சை பாமரர் முதல் படித்தவர் வரை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். எனவே தமிழக அரசு உடனே அவரை கைது செய்ய வேண்டும்.

LEAVE A REPLY