ரோகித் புறக்கணிப்பு; சச்சின் அதிருப்தி

311
Spread the love

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 20 ஓவர் போட்டிகள் 3ம் நடக்க இருக்கிறது. இதில் டெஸ்ட் போட்டி அக்.4ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டன் விராட் கோலி,கே.எல்.ராகுல், பிரித்வி ஷா,மயங்க் அகர்வால்,புஜாரா, ரகானே,விஹாரி, ரிஷப்பண்ட்,அஷ்வின் ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், சிராஜ், சர்துல்தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த அணி கோப்பையை வென்று அசத்தியது. ரோகித் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடானான டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சச்சின் டெண்டுல்கரும் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில்,
டெஸ்ட் தொடரில் ரோகித் ஷர்மாவுக்கு வாய்ப்பு அளிக்காகாதது நியாயமில்லை. அணித் தேர்வு வருத்தமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY