வைகோவுக்கு 1+1.. அதுக்கு தான் பொதுக்குழு கூட்டம்

303
Spread the love

திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு எத்தனை இடங்கள் என்பது இன்னமும் முடிவாகவில்லை. இரண்டு முறை பேச்சுவார்த்தையும் இழுபறி தொடர்கிறது. நேற்று நடந்த இரண்டாவது முறை பேச்சுவார்த்தைக்கு பின்னர் இன்று மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் அதில் ஆலோசனை செய்த பின்னரே எங்களது முடிவை அறிவிப்போம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார். அப்படிஎன்ன திமுக சொன்னது? பொதுக்குழு கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து பரபரப்பான  தகவல்கள் வெளியாகியுள்ளது. மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக அடுத்தபடியாக மதிமுகவிற்கும்  2 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. வைகோவிற்காக 1 ராஜ்யசபா தொகுதி மற்றும் 1 லோக்சபா தொகுதி என 2 தொகுதிகைள ஒதுக்கியுள்ளது. இதனை குறித்து ஆலோசிக்க தான் பொதுக்குழு என்கின்றனர் மதிமுகவினர். 

LEAVE A REPLY