மூட்டை மூட்டையாக திருச்சியில் குட்கா பறிமுதல்…

224
Spread the love

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்று காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செனராஷ்டிரா தெருவில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் 

தனிப்படை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார்கள்  சோதனை செய்தனர். அச்சோதனையில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய்  1 லட்சம் மதிப்புள்ள 8 மூட்டைகளில் இருந்த 25 கிலோ தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.  அமர் ஏஜென்சின் குடோன் உரிமையாளர் ஹரீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.  

LEAVE A REPLY