பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்

162

 பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ140 ஐ தொட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெட்ரோல் விலையை விட பால் விலை அதிகரித்துள்ளது. மொகரம் நாளை முன்னிட்டு பாகிஸ்தானின் கராச்சி, சிந்து மாகாணங்களில் பல இடங்களில் பால், ஜூஸ் ஆகியவற்றை இலவசமாக கொடுக்க ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாலின் தேவை அங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ120 முதல் ரூ140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ113க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ91-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பதுதான். பாகிஸ்தானில் அரசு நிர்ணயித்த ஒரு லிட்டர் பால் விலை ரூ94 மட்டும்தான்.ஆனால் பால் தட்டுப்பாட்டால் தற்போது மிக கடுமையான விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது

LEAVE A REPLY