ஏடிஎம்மில் குண்டுவீசி 10 ஆயிரம் கொள்ளை

115
Spread the love

மபி மாநிலம் காட்னி மாவட்டத்தில் பாகல் என்ற கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு மதியம் 2 மணியளவில் ஏடிஎம் மையத்திற்குள் குண்டுகள் வெடித்தது. இதனால் ஏற்பட்ட சத்தத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். அப்போது 3 பேர் மட்டும் எடிஎம்மையத்திற்குள் சென்று சிதறிக் கிடந்த இயந்திரத்தில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். தகவல் அறிந்து வங்கி அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க வெடிகுண்டுகளை வீசியிருப்பது தெரிய வந்தது.

ஆனால் வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.10 ஆயிரம் மட்டுமே இருந்ததாக தெரிவித்தனர். குண்டு வீசிய 3 பேரின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY