சேப்பாக்கம் மைதானத்தில் 1000 போலீசார் குவிப்பு!

298
Spread the love

ஐபிஎல் தொடரின் 12-வது சீசனின் 41-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்றைய கிரிக்கெட் போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள். இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து தமிழகத்தில் உள்ள முக்கியமான இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சேப்பாக்கம் மைதானத்திற்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 துணை ஆய்வாளர்கள், 14 இணை ஆய்வாளர்களுடன் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY