கொரோனாவை வென்ற 105 வயது தம்பதி……

58
Spread the love

மகராஷ்டிரா மாநிலம் லாடூர் மாவட்டம் கட்கவான் தண்டா கிராமத்தை சேர்ந்த 105 வயதான தேனு ஜவான், அவரது மனைவி 95 வயதான மொடொபாய் ஆகிய இருவருக்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்த இவர்களின் மகன் சுரேஷ் ஜாவன் தனது பெற்றோரை அம்மாவட்டத்தில் உள்ள தேஷ்முக் மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவர்களுக்கு  ஐசியூ வார்டில் 9 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே

சுரேஷ் ஜவானை சந்தித்த அவரது நண்பர்கள்…. 105 வயதானவர்களுக்கு கொரோனா தாக்கினால் மருத்துவமனையில் இருந்து உயிருடன் திரும்ப மாட்டார்கள்…என்று கூறி உள்ளனர். ஆனால் என்ன ஆச்சரியம் தம்பதியினர் இருவருக்கும் கொடுக்கப்பட்ட சிகிச்சையில் முழு குணமடைந்து வெற்றியுடன் வீடு திரும்பி உள்ளனர். இது குறித்து டாக்டர்கள் கூறுகையில்…. தம்பதியினர் இருவருக்கும் நோய் எதிர்ப்பு தன்மை இருந்ததால் எளிதாக சிகிச்சை அளிக்க முடிந்தது என்று கூறினர். 

LEAVE A REPLY