நிவர் புயலின் வெளிசுற்று கரையை தொட்டு விட்டது .. வானிலை மையம்..

467
Spread the love

11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்  இரவு 8 மணி முதல் புயலின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறிய அவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டதாக  கூறினார். இதன் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. நிவர் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் தற்போது 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.  அரக்கோணம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.List of cyclones in India in 2019-20

LEAVE A REPLY