10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் 12 வயது சிறுவன்!

117

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுத 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் தற்போது 12 வயது சிறுவன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஐசக்பால் அலுங்மான்(12). தற்போது 7 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இம்மாணவனுக்கு ஐ.க்யூ (அறிவாற்றல்) அளவு 12 வயதுக்குரியதை விட கூடுதலாக இருந்ததால் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதையடுத்து இம்பால் மருத்துவ அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் நடந்த சோதனையில் சிறுவனுக்கு ஐ.க்யூ அளவு 141 என்ற அளவில் இருப்பதாக சான்றிதழ் அளிக்கப்பட்டது. மனதளவில்  அவன் 17 ஆண்டு 5 மாதங்களாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மேல்நிலைப்பள்ளி வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து ஐசக்பால் கூறும்போது, பொதுத்தேர்வை எழுத மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஐசக் நியூட்டனாக பிடிக்கும். அதற்கு காரணம் எங்களின் இருவரது பெயரும் பொதுவாக இருக்கிறது’ என்றான்.

LEAVE A REPLY