பிளஸ் 2 தேர்வு நடக்குமா…?… அதிகாரிகள் அவசர ஆலோசனை..

92
Spread the love

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அடுத்து சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்தநிலையில் ஏற்கனவே 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேசமயம் பிளஸ்2 தேர்வுகள் வரும் மே 3ம் தேதி துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா மீண்டும் பரவ வேகமெடுத்துள்ளதால் தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  பிளஸ்2 பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்று மாலை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

LEAVE A REPLY