ஜெய்ப்பூரில் சமீபத்தில் கால்நடை கண்காட்சி நடந்தது. இதில் ஜோத்பூரை சேர்ந்த ஜவகர்லால் ஜாங்கிட் என்பவருக்குச் சொந்தமான பீம் என்ற எருமை மாடும் கலந்து கொண்டது. இந்த மாடுதான் இந்த கண்காட்சியின் ஹீரோ. காரணம் ஆறரை வயதான இந்த மாடு சுமார் 1300 கிலோ எடையுடன் இருந்தது.

இந்த மாடு மாதம் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தீவனம் எடுத்துக் கொள்கிறதாம். இதன்  தினசரி உணவுப்பட்டியல் இதோ.. ஒரு கிலோ நெய், அரைக்கிலோ வெண்ணை, 200 கிராம் தேன், 25 லிட்டர் பால், ஒரு கிலோ முந்திரி-பாதாம் ஆகியவைதான் இதன் தினசரி மெனு. 

இந்த மாட்டை பார்த்த பலரும் ரூ.14 கோடி வரை விலை பேசினர். ஆனால் ஜவகர்லால் ஜாங்கிட் தனக்கு அந்த மாட்டை விற்க மனம் வரவில்லை என தெரிவித்து விட்டார். கடந்தாண்டு 1200 கிலோ இருந்த இந்த மாடு இந்தாண்டு 100 கிலோ எடை கூடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY