Spread the love
சென்னையில் நடந்து முடிந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பான தமிழக உளவுத்துறையின் அறிக்கை தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அதிர்ச்சி அளித்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்துவோம். அதில் பிரதமர் கலந்து கொள்வார் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ் அ்ந்த விழாவிற்கு பிரதமரிடம் தேதி வாங்கத்தான் வந்திருக்கிேறன் என்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆனால் தமிழக அரசு சென்னையில் நடத்தி முடித்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி கூட்டம் போல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர்கள் யாரையாவது அழைத்து வரலாம் என செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில் தமிழக பாஜ தலைவர்களும் ஒதுங்கிக் கொண்டனர். இதனால் கண்டிப்பாக விழாவை பிரமாண்டமாக நடத்தி இந்தியாவை திரும்பி பார்க்க வைப்போம் என கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியது அதிமுக தலைமை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து கண்டிப்பாக 100 பஸ்களில் தொண்டர்களை திரட்ட ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கண்காணித்து அவ்வப்போது மேலிடத்திற்கு சொல்லிக் கொண்டே இருந்தனர் உளவுத்துறை போலீசார். தற்போது விழா முடிந்து விட்ட நிலையில் உணமையான நிலை என்பது குறித்த அறிக்கை எனக்கு வேண்டும என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு வாங்கியதாக கூறும் அதிகாரிகள் அந்த அறிக்கையை பார்த்து முதல்வர் அதிர்ச்சியாகி விட்டதாக தெரிவிக்கின்றனர்.
விழா நடைபெற்ற நாளன்று பஸ் மற்றும் வாகனங்களில் சென்னை நகருக்குள் வந்த தொண்டர்களின் எண்ணிக்கை 76 ஆயிரம் பேர் மட்டுமே என உளவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல் விழா அரங்கில் போடப்பட்ட சேர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம் மட்டுமே என குறிப்பிட்டுள்ளது உளவுத்துறை. அதிலும் சில இடங்களிலும் காலியாக இருந்ததை படங்களுடன் கொடுத்திருக்கிறது. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது சேர்கள் காலியாக இருந்த வீடியோக்களையும் காட்டியிருக்கிறது உளவுத்துறை. இதை பார்த்த முதல்வர் அதிர்ச்சியடைந்து விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY