15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தலைமறைவான அதிமுக மாஜி

267
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கோட்டார் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் அளித்தனர்.  இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை செய்து அந்த வாலிபரிடம் இருந்து சிறுமியை மீட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக குழந்தைகள் நல குழு அதிகாரிகளிடம் சிறுமியை ஆஜர் படுத்தினர் அங்கு அந்த சிறுமி கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட சிலர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து நாஞ்சில் முருகேசன் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டை போலீசார் சுற்றி வளைத்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து உள்ளனர். நேற்று நாஞ்சில் முருகேசன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY