அயோத்தி வழக்கு.. 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

164
Spread the love

அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ளலாம். மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் என்று கூறபப்ட்டிருந்தது. இதையடுத்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்டு 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

ரஷீத் என்பவர் தொடர்ந்த சீராய்வு மனுவில் ஏற்கனவே அங்கிருந்த கோவிலை இடித்து, மசூதி கட்டப்பட்டதா என்பது தான். அதற்கான ஆதாரம் இல்லை என, நீதிமன்றம் கூறியுள்ளது.’அப்படியிருக்கையில், இஸ்லாமியர்கள் தரப்புக்கே அந்த நிலத்தின் உரிமை இருப்பது தீர்ப்பு சொல்லும் ஆவணங்களின்படி உறுதியாகிறது. ஆனால், இறுதித் தீர்ப்பின் உத்தரவு மாறுபட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்துமகா சபாவின் சீராய்வு மனுவில் “அயோத்தியில் மசூதி கட்ட, சன்னி வக்பு வாரியத்துக்கு,5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் சற்று முன் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு 18 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 
 

LEAVE A REPLY