29ம் தேதி வரை 2 பேரையும் எதுவும் செய்யக்கூடாது.. கோர்ட் உத்தரவு

309
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீரென கைது செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர்  இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரியும், தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்தனர். குறிப்பாக பட்டியலின மக்கள் குறித்து தயாநிதி மாறன், பேசியிருந்ததால் அவர் கைது செய்யக் கூடும் என்பதால் மனு தாக்கல் செய்தனர். இதனை இன்று மாலை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எம்பிக்கள் 2 பேர் மீதும் வரும் 29ம் தேதி வரை எந்த விதமான கடுமையான நடவடிக்கையைம் போலீசரர் எடுக்க கூடாது என உத்தரவிட்டனர். 

LEAVE A REPLY