+2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை….

86
Spread the love

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், ” அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தான் முதல் ஆய்வு நடத்தியுள்ளேன்.  அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் உள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பல அரசு அதிகாரிகள் இங்கே பயின்றுதேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த நூலகம் பராமரிக்காமல் அப்படியே உள்ளது. நூலகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தனி குழு அமைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

திங்கட்கிழமை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். அந்த ஆலோசனை கூட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் வழங்குவது எப்படி என்பது குறித்தும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி நிறுத்தப்பட மாட்டாது. இன்னும் ஆக்கப்பூர்வமான பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். கல்விக் கட்டணம் தொடர்பாக அதிகாரிகள் பெற்றோர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி கட்டணம் தொடர்பாக நல்லதொரு முடிவை மாநில அரசு மேற்கொள்ளும் பெற்றோர்களுடைய நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

LEAVE A REPLY