2 நாய்களை பராமரிக்க மாதம் 2 லட்சம் சம்பளம்!

300
Spread the love

லண்டன் நைட்பிரிட்ஜ் என்ற பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களின் 2 நாய்களைப் பராமரிக்க ஆட்களைத் தேடி வருகின்றனர். அவர்களிடம் கோல்டன் ரேட்ரிவர் இனத்தை சேர்ந்த இரண்டு நாய்கள் உள்ளது. அவர்களின் பணி காரணமாக வீட்டில் நேரம் செலவிட முடியவில்லை.  அதனால் இரண்டு நாய்களையும் கவனித்துக் கொள்ள ஆட்களைத் தேவை என்று ஒரு விளம்பரத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வேலைக்கு ஆண்டுக்கு ரூ.29 லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளனர். 

மேலும் ரூ. 29 லட்சம் சம்பளத்துடன் 6 அறைகள் கொண்ட ஒரு சொகுசு வீடும் அவர்கள் தங்க தருகின்றனர். வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நாய்களை பராமரித்த அனுபவம் இருக்க வேண்டும். நல்ல உடற்கட்டு மற்றும் ஆக்டிவாக இருக்க வேண்டும். வீட்டு வேலைகளைச் செய்யத் தெரிய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதற்கு ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் அவகாசம் இருப்பதால் லண்டன் குளிரை தாங்க முடிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

LEAVE A REPLY