உக்ரைன் நாட்டில் அனைவரும் கட்டாயம் ராணுவ பணி செய்ய வேண்டும் என்பது சட்டம். இந்த சட்டப்படி அந்த நாட்டில் உள்ள ஆண்கள் எல்லாம் கட்டாயம் ராணுவத்தில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டும். அந்த பணிக்காலம் முடிந்த பின்பே அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்.
 சிலர் இதிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றே யோசித்து வருகின்றனர்.
அந்நாட்டில் உள்ள ஆண்களின் மனைவிகள் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவர்களை வீட்டில் வைத்துக் கவனித்துக் கொள்ள அவர்கள் ராணுவத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்நிலையில் ஒரு 24 வயது இளைஞன் ஒரு 81 வயது மாற்றுத் திறனாளி பாட்டியைத் திருமணம் செய்தார். இந்த திருமணத்தைப் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொண்டு ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்க்க வரும்போது எல்லாம் அந்த சான்றிதழைக் காட்டி தனது மனைவி மாற்றுத் திறனாளி என்பதால் தன்னால் ராணுவத்திற்கு வர இயலாது என்று அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார்.

 

LEAVE A REPLY