25 லட்சம் கொடுத்தால் தான் மாப்பிள்ளை அடம்..

65
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே ஆற்றூர் மூவாற்றுகுளம் பகுதியில் வசித்து வரும் தம்பதி சுவாமிதாஸ்- சுஜா. இந்த தம்பதியின் மகளுக்கு வரன் பார்த்து வந்த நிலையில், உத்திரம்விளையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்யும் முரலின் என்பவரை பற்றி கூறியுள்ளார். இதனையடுத்து சுவாமிதாஸ் முரலினின் பெற்றோரிடம் பேசி நிச்சயதார்த்ததுக்கு முடிவு செய்துள்ளனர்.

அதன் படி கடந்த ஜூலை மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது பெண் வீட்டார், 55 சவரன் நகையும் ரூ.5 லட்சம் பணமும் சீதனமாக தருவதாக கூறியதற்கு, மணமகன் வீட்டார் ஒப்புக் கொண்டுள்ளனர். அதன் பிறகு, மணமகனும் மணமகளும் செல்போனில் பேசி வந்த போது, தங்களது வீட்டில் புதுமனை புகுவிழா நடக்க உள்ளதாக மணமகன் கூறியுள்ளார். அதனால், பெண் வீட்டார் சோபா வாங்கிக் கொடுத்துள்ளனர். இவ்வாறு எல்லாம் சுமுகமாக சென்று கொண்டிருக்க, திடீரென ஒரு நாள் ரூ,25 லட்சம் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் நடக்கும் என மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார் சுஜா, போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் மணமகன் முரலின் மற்றும் அவரது தாய், ஐயப்பன், அவரது மனைவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY