கனமழையாம் உஷாராயிருங்க!

360
Spread the love

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
8 மீனவர்கள் மாயம்.!
தூத்துக்குடி, தருவைகுளத்தை சேர்ந்த பவுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் 8 பேரும், ரவி என்பவருக்கு சொந்தமான படகில் 10 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இரு படகில் சென்றவர்களையும் தொடர்பு கொள்ள முடியாததால், அவர்களை கடலோர காவல் படையினர் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY