Spread the love

தமிழகத்தில் லோக்சபா மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதையடுத்து இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் “குடிமகன்களின்” கூட்டம் அலை மோதியது. இதனால் விற்பனை பலமடங்கு எகிறியது. சாதாரணமாக ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனையாகும் கடைகளில் நேற்று ஒருநாள் மட்டும் ரூ. 3 லட்சத்துக்கு விற்பனையானது.

நேற்று மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 215 கோடி மதிப்பிலான  மதுவகைகளை பெட்டி, பெட்டியாக குடிமகன்கள் வாங்கிச் சென்றனர். இதில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு  விற்பதற்காக வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY