தமிழகத்திற்கு 3 புதிய மருத்துவ கல்லூரிகள்

114

கடந்த அக்.23 ஆம் தேதி தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி இராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் அமைக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க நிதி ஒதுக்கியது.

இந்நிலையில் இன்று மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள்  அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூரில் 3 மருத்துவக்கல்லூரிகள் அமைகின்றன. இதற்காக ரூ.325 கோடியை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மேலும் 450 மருத்துவ படிப்பு இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

l

LEAVE A REPLY