3 மனைவிகள்.. 11 குழந்தைகள்.. இருந்தும் தீராத…

182

புதுக்கோட்டை அருகேயுள்ள தேனிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்(53). இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவிக்கு 8 குழந்தைகளும், 2 வது மனைவிக்கு 2 குழந்தைகளும், 3 வது மனைவிக்கு 1 குழந்தைகளும் உள்ளனர். 3 வது மனைவி முருகேசனை விட்டு பிரிந்து சொந்த ஊரான கொடைக்கானலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி முருகேசனின் 2 வது மனைவி அங்குள்ள தைல மரக்காட்டில் ஆடு மேய்த்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

 உடல் அடக்கத்தின் போது முருகேசன் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது தெரிய வந்ததாவது; 2 வது மனைவியின் 20 வயது மகள் இசை கச்சேரிகளில் நடனம் ஆடி வந்தார். அவரை கச்சேரிகளுக்கு முருகேசன் அழைத்து சென்று வந்தார். இந்நிலையில் மகளிடம் ஆபாச வீடியோக்களை காட்டி தனது இச்சைக்கு இணங்குமாறு முருகேசன் தொந்தரவு அளித்து வந்தார். இந்நிலையில்  கொலை  சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த மகளிடம் முறை தவறி நடக்க முயன்றார் முருகேசன். இதையடுத்து தாயிடம் நடந்ததை மகள் சொல்ல மனைவி முருகேசனை திட்டியிருக்கிறார். இந்நிலையில்தான் அவர் ஆடுமேய்த்த போது முருகேசன் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

LEAVE A REPLY