பாதிரியார் கைது…. 30 பேர் மீது வழக்குபதிவு

89
Spread the love

கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் கோயில், மசூதி, தேவாலயம் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கூட்டு பிரார்த்தனை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி கூட்டு பிரார்த்தனை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர், அவினாசி சாலை, குமார் நகரிலுள்ள இயங்கி வரும் சிஎஸ்ஐ தேவாலயத்தில் தடையை மீறி நிறைய பேர் பிரார்த்தனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கு சென்ற போலீசார் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த பாதிரியார் வில்சன்குமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY