ஆஸ்பத்திரி ஜன்னலை உடைத்து 30 கொரோனா நோயாளிகள் தப்பி ஓட்டம்….

251
Spread the love

திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் 40 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனை கண்ணாடி ஜன்னலை உடைத்து அதன் வழியாக 30 கொரோனா நோயாளிகள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே தப்பி ஓடியவர்கள் அனைவரும் வௌி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், திரிபுராவில் நடைபெற்ற ரைபிள் பாதுகாப்பு படைபிரிவு ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள வந்தவர்கள் என்று போலீசார் விசாரணையில் தொிய வந்துள்ளது. இந்த சம்பவம் திரிபுராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY