கருப்பு பட்டியலில் 312 சீக்கியர் பெயர் நீக்கம்!

47
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியர்களின் காலிஸ்தான் அமைப்பு போராடி வந்தது. 1980 ஆம் ஆண்டு இது தொடர்பாக நடந்த கலவரத்தின் போது சீக்கியர்கள் பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். 
அவர்களில் 314 சீக்கியர்களை ஒருமைப்பாட்டை சீர்குலைத்து பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இந்தியாவுக்குள் நுழைய முடியாதவாறு கருப்பு பட்டியலில் மத்திய அரசு வைத்திருந்தது.
இந்நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு அந்த 314 பேரில் 312 சீக்கியர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருக்கும் சீக்கியர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்கள் குடும்ப உறவினர்களை இனி சந்திக்கலாம். 

Warning: A non-numeric value encountered in /cloudsin/w6lim1rteiyb/public_html/wp-content/themes/Newspaper/includes/wp_booster/td_block.php on line 353

LEAVE A REPLY