பாகிஸ்தான்- ஆஸ்திரேலிய அணிகளிடையேயான 2 வது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஆஸி., அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்னுடன் வெளியேற, மார்னஸ் லபுசேன் டேவிட் வார்னர் ஜோடி காட்டடி அடித்து அதிரடி காட்டினர். லபுசேன் 162 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின் வந்த  ஸ்டீவ் ஸ்மித் விரைவாக 7000 ரன்கள் கடந்த சாதனையை படைத்து 36 ரன்னில் அவுட்டானார். ஆனால் மறுமுனையில் அசராமல் அதிரடியை தொடர்ந்தார் டேவிட் வார்னர். அவர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 389 பந்துகளில் 335 ரன் எடுத்திருந்தபோது ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. அப்போது அணியின் ஸ்கோர் 589.

வார்னர் முச்சதம் அடித்து 2019 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்த வீரர் என்ற கோலியின் சாதனையை அவரிடமிருந்து பறித்தார். கோலி அடித்த 254 ரன்கள் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டியில் பிரையன் லாரா மட்டுமே 400 ரன்களைக் கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய அணியில் முச்சதம் விளாசிய 7வது வீரர் வார்னர். பாகிஸ்தானுக்கெதிராக முச்சதம் விளாசிய 4வது வீரர். அந்த அணிக்கெதிராக முச்சதம் விளாசிய 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் வார்னர் பெற்றார்.   335 ரன்னில் அவர்  ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை.

LEAVE A REPLY