எச்சரிக்கை…. கொரோனா 3வது அலை… குழந்தைகளுக்கு அதிகம் பரவ வாய்ப்பு…

109
Spread the love

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில்,அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் புதன்கிழமையன்று இதுப்பற்றி கூறுகையில்,”வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால் மூன்றாம் கட்ட அலையானது தவிர்க்க முடியாததாக இருக்கும்.ஆனால்,இந்த 3 ஆம் கட்ட கொரோனா அலை பரவலானது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே,புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்”,என்று கூறினார். இதனைத்தொடர்ந்து,இந்தியாவில் கொரோனா வைரஸின் 3வது அலை குழந்தைகளை மோசமாக பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதாவது நிபுணர்களின் கூற்றுப்படி,கொரோனா வைரஸின் முதல் அலையானது வயதானவர்களைத் தாக்கியது.அதன்பின்னர்,கொரோனா இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில்,கொரோனா வைரஸின் 3வது அலை பரவலில் குழந்தைகள் அதிகம் பாதிககப்படுவர்.அதுமட்டுமல்லாமல்,இந்த கொரோனா 3 ஆம் அலையானது குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். எனவே,பெற்றோர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்காரணமாக,கனடாவில் 12 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது ‘ஃபைசர் பயோஎன்டெக்’ என்ற கொரோனா தடுப்பூசி வழங்க அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது,மேலும் அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியை அடுத்த வாரத்திற்குள் அங்கீகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY