Spread the love

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1995ம் ஆண்டு நவ. 18ம் தேதி பிரேம்குமார்- ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்தன. இதில் 4 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை. ஒரே ராசி, உத்ர நட்சத்திரத்தில் பிறந்ததால் அக் குழந்தைகளுகு்கு உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா மற்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என பெயர் வைத்தனர்.
இந்நிலையில் இந்த குழந்தைகளுக்கு 9 வயதாக இருக்கும்போது பிரேம் குமார் தொழில் நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.  இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பம் திண்டாடிய நிலையில் அரசு ரமாதேவிக்கு கூட்டுறவு வங்கியில் வேலை வழங்கியது.

தற்போது உத்ரா பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா மயக்கவியல் மருத்துவராகவும், உத்தாரா பத்திரிக்கையாளராகவும் உள்ளனர். 
இந்நிலையில் இவர்கள் 4 பேருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு 4 மாப்பிள்ளைகளுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. சகோதரிகளின் திருமண ஏற்பாடுகளை  சகோதரர் உத்ராஜன் செய்து வருகிறார். ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மணமேடையில் திருமணம் நடக்கவுள்ளது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY