Spread the love

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவு விபரம் குறித்து தெரிவித்துள்ளது. இதில் ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்ட வகையில்  1.17 கோடி செலவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மீண்டும் விளக்கம் அளித்த அப்பலோ நிர்வாகம் அது உணவுக்கான செலவு மட்டும் கிடையாது. அவர் மருத்துவமனையில் இருந்தபோது, அது சார்ந்து செலவிடப்பட்ட உணவு தொகை என்று தெரிவித்தது. அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட சாப்பாட்டு செலவு உட்பட அடங்கும் என்றது. இதற்காக மீடியாக்களுக்கு ரூ.48.43 லட்சம் செலவிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது மருத்துவமனைக்கு வெளியே ஷிப்ட் முறையில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் கூறுகையில், 75 நாட்களுமே அப்பல்லோ மருத்துவமனைக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. எங்களுக்கு யாரும் உணவு தரவில்லை. சொந்த பணத்தை செலவிட்டு அருகேயுள்ள ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டு வந்தோம். ஆனால் அவர்கள் இப்போது இவ்வாறு தெரிவிக்கின்றனர் என்றனர்.

LEAVE A REPLY