5 லட்சம் காவலர் பணியிடங்கள்….

132
Spread the love
நாடு முழுவதும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக போலீஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் ஆளுகைக்கு உட்பட்டு காவல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முகமை bprd.nic.in செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் காலியிடங்களின் எண்ணிக்கை, காவல்நிலையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட ஆய்வை மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கும்.
அந்த வகையில், ‘Data on Police Organisations as on January 1, 2019’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதும் சுமார் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், 14,533 காவலர் பணயிடங்கள் காலியாக உள்ளது.
 
பெண் போலீஸை பொறுத்தவரையில் 1 லட்சத்து 85 ஆயிரம் 696 பேர் உள்ளனர். இது ஒட்டு மொத்த போலீஸ் எண்ணிக்கையில் 8.98 சதவீதம் ஆகும். கடந்தாண்டை காட்டிலும் 9.25 சதவீதம் பெண் போலீஸ் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் 690 புதிய போலீசார் நியமிக்கப்பட்டனர்.

இதே போல் காவல்நிலையங்கள் குறித்த விவரங்களும் போலீஸ் ஆய்வு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிக காவல்நிலையங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்குகிறது. உத்தரப்பிரதசேத்தில் 1,532 காவல்நிலையங்கள், மஹராஷ்டிராவில் 1,163 காவல்நிலையங்கள் உள்ளது. இவை தமிழகத்தை காட்டிலும் பெரிய மாநிலங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் 2,019 காவல்நிலையங்கள் உள்ளது.

LEAVE A REPLY