5 நிமிசத்தில ஈவ்னிங் வாழைப்பழ பான்கேக்….

129
Spread the love
தேவையானவை: கோதுமை மாவு – 1 கப்,வாழைப்பழம் மசித்தது – 1, மைதா மாவு -1கப், பேக்கிங் பவுடர்- 1/2 ஸ்பூன், சர்க்கரைப்பொடி- 2ஸ்பூன், உப்பு-தேவைக்கு,  ஏலக்காய் பொடி- 1/2 ஸ்பூன், பால்-1 கப், நெய்-4 ஸ்பூன்.
 
செய்முறை:  மைதாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து 2,3 முறை சலித்து எடுத்து ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் போடவும். இதனுடன் கோதுமை மாவு, சரக்கரைப்பொடி, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். இன்னொரு வாய் அகலமான பாத்திரத்தில் வாழைப்பழத்தை உரித்து நன்கு மசித்துப் போடவும். இதன்மேல், பால் ஊற்றி 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். மேலும் கோதுமை, மைதா மாவுக் கலவையைப் போட்டு கட்டியில்லாமல் கலந்து , அரை மணி நேரம் வைக்கவும். ஒரு நான்ஸ்டிக் பானில் பான் கேக் கலவையிலிருந்து 2 கரண்டியை ஊத்தப்பம் போல ஊற்றி, சுற்றிலும் நெய் விட்டு, பொன்னிறமாக எடுத்து சுட்டிஸூக்கு பேக் செய்யவும். தேனை பான் கேக் மேல் ஊற்றி வைக்கலாம். சுவையான பான்கேக் ரெடி.

LEAVE A REPLY