செக்ஸ் வீடியோ மனநோயாளிகள்.. திருச்சி போலீஸ் வளையத்தில் 500 பேர்

1681
Spread the love

கடந்த 2 ஆண்டாக குழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோக்களை டவுன்லோடு செய்து அவற்றை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்த திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த கிரி என்ற கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42) என்ற நபரை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கிறிஸ்டோபர் பேஸ்புக்கில் நிலவன், ஆதவன் என போலி பெயர்களில் மெசேஞ்சர் மூலமாக செக்ஸ் வீடியோக்களுக்கான தனி குரூப் வைத்திருந்ததும் இதில் சுமார் 500 பேர் சேர்ந்து இருந்ததும் தெரிய வந்திருக்கிறது.

இந்த குரூப்புகளில் தினமும் குழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோக்களை கிறிஸ்டோபர் அனுப்பியுள்ளான். தற்போது அவன் கைது செய்யப்பட்ட நிலையில் கிறிஸ்டோபர் வைத்திருந்த குரூப்பில் உள்ள நபர்களை பட்டியலிடும் பணிகளை திருச்சி சைபர் க்ரைம் போலீசார் மேற்கொண்டுள்ளனர். இந்தப்பணி இன்று முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் குரூப்பில் இருக்கும் 500 பேர் மீது எந்தவகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் திருச்சி மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY