5,8 பொதுதேர்வுக்கு 3 பாடம்தான்..அமைச்சர் தகவல்

177
Spread the love

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டி; முதல்வர் ஆவேன் என்று 2 ஆண்டுக்கு முன் எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். அவர் கூறியது கனவு என்பது அல்ல, அது நனவாகத்தான் இருந்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் பல முறை இந்த ஆட்சி விரைவில் போய்விடும் என்றார். ஆனால் 122 பேராக இருந்த நாங்கள் தற்போது 124 பேராகியிருக்கிறோம். 30 ஆண்டு பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்ற திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வாரத்தில் அது குறித்து அறிவிக்கப்படும். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் தேர்வு. இவ்வாறு அமைச்சர் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY