திருச்சி லலிதா கொள்ளை..முருகனுக்கு 7 நாள் கஸ்டடி

104
Spread the love

திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில், கொள்ளை கும்பலின் தலைவனான முருகன் பெங்களூருவில் சரணடைந்ததால் அவனை  கஸ்டடி எடுக்க தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பெங்களூர் போலீசாரின் விசாரணை முடிந்த  விட்ட நிலையில் பெங்களூரு நீதிமன்றம் லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில்  முருகனை விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து நேற்று மதியம் முருகனுடன் திருச்சி புறப்பட்ட  போலீசார் நேற்றிரவு 9 மணிக்கு ஜே.எம். 2 நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் முருகனை 14 நாள் கஸ்டடி கேட்டு மனு செய்தனர். ஆனால் கோர்ட் 7 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து முருகனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

திருச்சி நீதிமன்றத்திற்கு முருகனின் மனைவி மற்றும்  குழந்தைகள் வந்திருந்தனர். அவர்களை கண்டதும் முருகன் கண்ணீர்விட்டு அழுதான்.

LEAVE A REPLY