83 நாட்களுக்கு பிறகு பிரதமர் மோடி.. சர்ச்சை ஏற்படுத்திய புகைப்படம்

907

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட டில்லியில் இருந்து விமானம் கொல்கத்தா வந்தார் பிரதமர் மோடி. கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி உபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி கொரோனா காரணமாக அதன் பின்னர் வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. அம்பன் புயல் பாதிப்புகளை பார்வையிட 83 நாட்களுக்கு பிறகு கொல்கத்தா வந்தார். பின்னர் ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி , கவர்னர் ஜெகதீப், முதல்வர் மம்தா ஆகியோர் பார்வையிட்டனர்.   முன்னதாக விமானத்தில் இருந்து பிரதமர் மோடி வந்திறங்கிய போது முதல்வர் மம்தா அவரை கவனிக்காதது போல் தான் வைத்திருந்த பேப்பரை பார்த்துக்கொண்டிருந்த புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

LEAVE A REPLY