40க்கு விட்டுக்கொடுத்த 85-ன் சோக முடிவு..

123
Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 85 வயது முதியவர் நாராயண் தபாத்கர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர்  நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவருக்கு படுக்கையைத் தருமாறு நாராயண் தபாத்கரிடம் ஒரு பெண்மணி கெஞ்சி உள்ளார். மனமிறங்கிய தபாத்கர்…. நான் முன்பதிவு செய்து பயன்படுத்தி வந்த ஆக்சிஜன் படுக்கையை அந்த இளைஞருக்கு

கொடுங்கள். எனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டேன். சிகிச்சைக்கு வந்த இளைஞர் உயிர்வாழ வேண்டும். அதனால், படுக்கையை அந்த நபருக்குத் தரச் சொல்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுதி கொடுத்துள்ளார். தனது படுக்கையை அந்த பெண்ணின் கணவருக்காக ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு சென்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால், வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நாராயண் தபாத்கர் வீடு திரும்பி மூன்று நாட்களில் காலமானார். ஆனால் இவரின் செயல் அந்த மாநிலத்தில் கண்ணீரை வரவழைத்து உள்ளது. 

LEAVE A REPLY