8ம் தேதி முதல் ஸ்டிரைக்.. காய்கறி கிடைக்காது வியாபாரிகள் சங்கம் மீண்டும் அறிவிப்பு

259
Spread the love

திருச்சி காய்கறி மொத்த மார்கெட் தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் 8ம் தேதிக்குள் காந்திமார்கெட்டை திறக்கவில்லை என்றால் இனி திருச்சி மாவட்டத்தில் காய்கறி விற்பனை செய்ய மாட்டோம் என திருச்சி காந்திமார்கெட் அனைத்து வியாபாரிகள் அறிவித்துள்ளனர், இந்த ஸ்டிரைக் குறித்து காந்திமார்கெட் அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கத்தலைவர் கோவிந்தராஜூலு கூறியதாவது…  திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்படும் மொத்த வியாபார சந்தை வழக்கம்போல சனிக்கிழமையான இன்று செயல்படாது. அரசு முறையான அறிவிப்பு வெளியிடவில்லை என்றால் நாளை முதல் எங்களது போராட்டம் தொடங்கும் என கூறியுள்ளார். 

LEAVE A REPLY