9 சிலைகளுக்கு மாலை…. திருச்சி அமைச்சர்கள் புதிய சாதனை

379
Spread the love

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அவருடன் அமைச்சர் வளர்மதியும் சேர்ந்து கொள்ள இவரும் 9 இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு சளைக்காமல் மாலை அணிவித்து சாதனை படைத்தனர்.. கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை,  மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை, தேவர் சிலை, அரிஸ்டோ ரவுண்டானாவிலுள்ள அம்பேத்கர் சிலை, கோர்ட் எதிரே உள்ள வவுசி சிலை, சிந்தாமணியில் உள்ள அண்ணாசிலை, மரக்கடை மற்றும் சுப்பிரமணியபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைகள், ஒத்தக்கடையில் உள்ள முத்தரையர் சிலை என வளைத்து வளைத்து திருச்சி மாநகரில் உள்ள ஒன்பது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருச்சி வரலாற்றில் திமுக மற்றும் அதிமுகவில் பல தலைவர்கள் இருந்துள்ளனர்.  அவர்களில் யாரும் இன்று போல் 9 சிலைகளையும் தேடித் தேடி சென்று மாலை அணிவித்ததில்லை என நிர்வாகிகள் கூறுகின்றனர். 

  

 

LEAVE A REPLY