அடுத்தடுத்து பீகாரில் ஷாக்… விவசாயி வங்கி கணக்கில் ரூ.52 கோடி….

113
Spread the love

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரது வங்கி கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறால் சுமார் 5.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் பணத்தை திரும்ப கேட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி எல்லா மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுறேன்னு வாக்குறுதி குடுத்தார். அதில் முதல் தவணையாக 5.5 லட்சம் என்னுடைய அக்கவுண்டில் போட்டிருக்கார். நான் பணத்தை செலவு செய்துவிட்டேன் திருப்பித் தரமுடியாது எனக் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல, பீகார் மாநிலம் கட்ஹார் மாவட்டம் பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்த குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார் ஆகிய சிறுவர்கள் தங்களது பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்று சோதனை செய்வதற்காக அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளது.

வங்கியில் சோதனை செய்தபோது விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடி ரூபாயும், அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்துள்ளது. இந்த விவகாரம் சிறுவர்கள் உள்பட வங்கி ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிறகு, விசாரணை மேற்கொண்டதில், கணினி முறையில் சில பிரச்னைகள் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டதாக விளக்கம் அளித்தனர்.

இந்தநிலையில், தற்போது பீகாரின் முசாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பகதூர் ஷா என்ற விவசாயி ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.52 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, ரூ.52 கோடி இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY