ராமேஸ்வர கடற்கரையில் 9 கோடி தங்கம் புதைக்கப்பட்டதா? தேடுதல் வேட்டை

259
Spread the love

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 9 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கொண்டு வரப்பட்ட பைகள் ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபம் முதல் பெருங்குளம் வரையிலான கடற்கரைப்பகுதியில் புதைக்கப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று முதல் தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் இருந்து படகில் வந்த மர்ம ஆசாமிகள் கரையில் இறங்கி வந்த போது ஜீப் வந்ததைப் பார்த்துள்ளனர். வருவது போலீசார் என எண்ணிய மர்ம ஆசாமிகள் கொண்டு வந்த பைகளை கடற்கரையில் புதைத்து விட்டு சென்று விட்டதாக மீனவர்கள் சிலர் கூறிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு முதல் தனிப்படை போலீசார் கடற்கரைப் பகுதிகளில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY