Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேக விழாவை ஒட்டி சிவாச்சாரியார்கள் யாக குண்டங்கள் அமைத்து சிறப்பு யாகங்கள் நடத்தி பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு ஆறாம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார் புண்ணிய தீர்த்தத்திற்கு பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு கலசங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வலம் வந்தார். பின்னர் கோபுர கலசத்தை சென்றடைந்ததும் அஷ்ட பந்தன மகா

கும்பாபிஷே விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் பொட்டிட்டு தீபம் காண்பிக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் புது வாங்கலம்மனுக்கு புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கரூர் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் டன் கணக்கில் பூக்கள் மழை தூவப்பட்டது. கும்பாபிஷே விழாவில் சுமார் 40,000 பொதுமக்கள் வருகை இருந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பாபிஷேக விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!