தமிழகத்தில் புதிதாக த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றவுடன் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்று.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்தவர்களை போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும், அதற்கான லட்சினையையும் (லோகோ) அவர் வெளியிட்டார். அதை அவரிடம் இருந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் தலைவர் பவானீஸ்வரி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த வாகனங்களின் அணிவகுப்பும் நடந்தது. ஒரு ரோந்து வாகனத்தில் ஏறி, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இயக்கி பார்த்தார். விழாவில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது:-மனதுக்கு நெருக்கமான நிகழ்வுஒருசில நிகழ்ச்சிகள் மட்டும்தான் மனசுக்கு நெருக்கமானதாக இருக்கும். மிகவும் சந்தோஷமாக இருக்கும். இந்த நிகழ்வும் அதுமாதிரிதான். மனதுக்கு நெருக்கமானது.பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகளுக்கு அனைத்து பாதுகாப்பையும் உறுதி செய்வதாக சொன்னோம். தேர்தலுக்காக இதைச் சொல்லவில்லை. அதில், உறுதியாக இருக்கிறோம்.
போதைப் பொருள் நடமாட்டம்செயலில் கொண்டு வருவதிலும் உறுதியாக உள்ளோம். அதனால், ஆட்சிக்கு வந்த கொஞ்ச நாளிலேயே கொண்டுவந்துள்ளோம். பெண்களுக்கு நடக்கும் கொடுமையை கேட்கும்போது மனது பதறுது. இதை ரீல்ஸ் போல் இன்ஸ்டாவில் பார்க்க முடியாது.எல்லாவற்றுக்கும் காரணம் போதைப் பொருள் நடமாட்டம்தான். பல ஆண்டு கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இதற்கு காரணம்.
போதைப்பொருளை வேறோடு பிடுங்கி எறிய வேண்டும். இதை எப்படி சரிசெய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்-ஒழுங்கை தாண்டி, சமூக ஒழுக்கத்தை சார்ந்தது. பெண்கள் பயமில்லாமல் மரியாதையோடு வாழ வேண்டும். பெண்கள் பாதுகாப்பை மீறுவதை சகிக்க முடியாது. தண்டனை கடுமையானதாக இருக்கும். நடவடிக்கை வேகமாக நடைபெறும்.ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடுஇதில், நிரபாதிகள் யாரும் தண்டிக்கப்படக்கூடாது. தப்பு செய்தவர்களுக்கு மட்டும் கோர்ட்டு மூலம் தண்டனை வாங்கிகத்தர வேண்டும். இந்த திட்டத்திற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கபடுகிறது. 2,500 பணியிடம் உருவாக்கப்படும். பெண்களுக்கு குற்றம் நடக்கும் முன்னே அதை தடுக்க இந்த படை முயலும். டிரோன் வாயிலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். பெண்களுக்கான கண்ணியம்தான் அரசின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
என்னை பொறுத்தவரை, ஒரு அரசின் முழு வெற்றி, பெண்கள், குழந்தைகள் மரியாதையாக வாழ்வதில்தான் இருக்கிறது. மற்றவை எல்லாம் அதன்பிறகுதான். நம்பிக்கையோடு இருங்கள். வெற்றி நிச்சயம்.இவ்வாறு அவர் பேசினார்.அணிவகுப்பு மரியாதைமுன்னதாக, ஐ.ஜி. ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, அணிவகுத்து நின்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரை அவர் பார்வையிட்டார்.
