Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வரலாறு படைத்த ஒடிசா: LKG முதல் PG வரை இலவச கல்வி – முதல்வர் மோகன் மாஜி அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.

இதன்மூலம் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால பிஜு ஜனதா தள ஆட்சி முடிவுக்கு வந்தது.ஒடிசா முதல் மந்திரியாக மோகன் சரண் மாஹி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் ஒடிசாவின் முதல் பா.ஜ.க. முதல்-மந்திரி என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. கே.வி.சிங் தியோ, பிரபதி பரிடா ஆகியோர் துணை முதல் மந்திரிகளாக பதவியேற்றனர்.இதற்கிடையே, பாஜக தலைமையிலான ஒடிசா அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி மோகன் சரண் மாஹி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-பா.ஜ.க. அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை மாநிலத்தின் அனைத்து மாணவர்களுக்கும், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் பயனளிக்கும். கல்வியை உண்மையாகவே இலவசமாகவும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையிலும், எனது அரசு கிண்டர்கார்டன் முதல் முதுகலை பட்ட மேற்படிப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இலவச கல்வி வழங்கப்படும்.

கல்வித் துறையில் இத்தகைய நடவடிக்கை, நாடு முழுவதிலும் முதல்முறையாக ஒடிசாவில் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

error: Content is protected !!