ஆதார் எண்ணை பாதுகாக்கும் வழிமுறை!

179
Spread the love

தற்போது நம் நாட்டில் எங்கு சென்றாலும் ஆதார் கேட்பதால்,  ஏன்? எதற்கு? என கேள்வி எழுப்பாமலே கேட்ட இடத்தில் எல்லாம் ஆதார் எண்ணை சொல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் ஆதார் எண்ணை சொல்ல கூடாது. குறிப்பாக வங்கியில் இருந்து கால் செய்கிறோம் என அழைப்பு வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் ஆதார் எண்ணை மட்டுமே வைத்து நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துவிடும் அபாயம் உள்ளது. கணக்கில் பணம் இல்லை என்றாலும் வேறு முறைகேடான செயல்களுக்கு நமது எண்ணை பயன்படுத்திவிடுவர். ஆன்லைன் மூலமாகவும் நமது எண்ணை அவர்கள் அறிந்து கொள்ளும் நிலை இருக்கிறது.

 ஆதார் எண்ணை எப்படி பாதுகாப்பது என்பதை பார்க்கலாம்.

1.//resident.uidai.gov.in/find-uid-eid என்கிற லிங்கை பயன்படுத்தி முகப்புப் பக்கத்திலேயே தொலைந்த ஈஐடி/யுஐடி மீட்டெடுப்பதற்கான தேர்வை காணலாம்.

2. தேர்வின் படி ஆதார் எண் (யுஐடி) அல்லது பதிவு எண் (ஈஐடி) தேர்ந்தெடுக்கவும். பின்னர் முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை அதில் பதிவிடவும்.

3. பின்னர் ஓடிபி கேட்டு, அதை பதிவிடவும். அவ்வாறு செய்தவுடன் மொபைலில் ஆதார் அட்டை எண் அல்லது பதிவு அடையாளத்துடன் ஒரு எஸ்.எம்.எஸ் வரும்.

4. பின்னர் //eaadhaar.uidai.gov.in/ என்கிற இந்த லிங்கை பயன்படுத்தி, ஐ ஹேவ் என்பதன் கீழ் தலைப்பின் கீழ் பதிவு எண் அல்லது ஆதார் எண் என்பதில் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யவும்.

5. பிறகு ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும். பின்னர் மீண்டும், முழுப்பெயர், அஞ்சல் குறியீடு, பாதுகாப்பு எழுத்துக்கள், மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுத்து பிறகு ஓடிபி பெறவும்.

6 இப்படி செய்தால் உங்கள் ஆதாரை உங்களை தவிர வேறு யாராலும் ஆன்லைனில் பார்க்க முடியாது.

LEAVE A REPLY